அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும் ஒரு சிலர் விரதம் இருந்து தேவியை வழிபடுவது வழக்கம். நவராத்திரி நாளில் அன்னை ஆதிபராசக்திக்கு ஒன்பது இரவுகள் கோலாகலமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வழிபாடு செய்யப்படுகிறது. நாடு முழுவதுமே ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களுடைய பழக்க வழக்கத்திற்கு ஏற்ப அவர் நவராத்திரி விமர்சையாக கொண்டாடுகிறார்கள்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்பாளை வழிபடும் முறை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒரு சிலர் நவ கன்னிகையாகவும், இன்னும் சிலர் நவ துர்க்கையாகவும் வழிபாடு செய்கிறார்கள்.  துர்க்கை அம்மன்: இவள் நெருப்பின் அழகு. ஆவேச பார்வை கொண்டவர். வீரத்தில் தெய்வம். சிவப்ரியை.   வீரர்கள் தொடக்கத்தில் முடிவிலும் வழிபடும் தெய்வம் இவள்.

லட்சுமி தேவி: மலரின்  அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியா சக்தியானவள். லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுதமயமானவள். பொன்னிற மேனியோடு கமலஹாசனத்தில் வீற்றிருப்பாள். நான்கு யானைகள் எப்போதும்  இவளை  நீராட்டுகிறது. சரஸ்வதி தேவி: இவள் வைரத்தில் அழகு அமைதி பார்வையுடன் அழகாக பிரகாசிப்பாள். வெண்தாமரையில்  வீற்றிருப்பாள். கல்வியின் தெய்வம். பிரம்ம ப்ரியை. ஞானசக்தி அறியாத செல்வமான கல்வி அனைவருக்கும் வழங்கும் சக்தியாக இவள் விளங்குகிறார்.