அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும் ஒரு சிலர் விரதம் இருந்து தேவியை வழிபடுவது வழக்கம். நவராத்திரி நாளில் அன்னை ஆதிபராசக்திக்கு ஒன்பது இரவுகள் கோலாகலமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வழிபாடு செய்யப்படுகிறது. நாடு முழுவதுமே ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களுடைய பழக்க வழக்கத்திற்கு ஏற்ப அவர் நவராத்திரி விமர்சையாக கொண்டாடுகிறார்கள்.

இந்த நாட்களில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது? என்பது குறித்து பார்க்கலாம். காலை மாலை என இரண்டு வேளையும் விளக்கேற்றி தவறாமல் நெய்வேத்தியம் செய்து வணங்க வேண்டும். அதேபோல திருவுருவப் படங்களையும் பூஜை செய்து தினமும் நெய்வேத்தியம் வைத்து வழிபடலாம். பிறரை அவமரியாதையோடு செய்யும்படி நடந்து கொள்ளக் கூடாது. குறிப்பாக பெண்களுக்கு மரியாதை அளிப்பதை கற்றுக்கொள்ள வேண்டும் .அதன்படியும் நடக்க வேண்டும். இந்த நாட்களில் வீடு அமைதியாக இருக்க வேண்டும். தேவையில்லாத சண்டை சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது.

நவராதியின் பொழுது பழைய காலணிகள், செருப்புகள், உடைந்த கண்ணாடி பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாக இல்லை. அதை தூக்கி எறிய வேண்டும். சிலந்தி வலைகள், வாஸ்து சாஸ்திரம் படியும் மிகவும் அசுவமாக கருதப்படுகிறது. எனவே அவற்றை வீட்டில் இருந்து அகற்றுவது நல்லது. வீடு அல்லது பூஜை அறையை சுத்தம் செய்யும் பொழுது சிலைகள் அல்லது தெய்வங்களின் படங்கள் எதுவும் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை உடைந்தால் அதை வீட்டில் இருந்து அகற்றி ஆற்றிலோ  அல்லது  குளத்திலோ  போட வேண்டும். இல்லை என்றால் அது வீட்டில் எதிர்மறை சக்தியை உருவாக்கும். நவராதியின் போது ஒன்பது நாட்களும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். நவராத்திரியில் அம்மனை வழிபடும் முன்பாக வீட்டில் ஏதேனும் உணவு அல்லது கெட்டுப்போன பொருட்கள் இருந்தால் அதை சமையலறையில் இருந்து அகற்றி விட வேண்டும். ஒன்பது நாட்களில் வெள்ளிக்கிழமை அன்று பெண்களை அழைத்து விருந்து வைத்து புடவையோ அல்லது ஏதேனும் துணி வாங்கிக் கொடுத்து ஆசீர்வாதம் பெறலாம்.