அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பாண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும் ஒரு சிலர் விரதம் இருந்து தேவியை வழிபடுவது வழக்கம்.

இந்த நவராத்திரி நாளில் ஆரோக்கியமான வழியில் விரதத்தை கடைபிடிக்க விரும்பினால் என்னென்ன சாப்பிடலாம் என்பது குறித்த உணவு பட்டியலை பார்க்கலாம். இந்த விரத காலத்தில் உண்ணும் தானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு பெரும்பாலும் மிக அதிகம் இருக்கிறது. சீமைத்தினை, பப்பரை கோதுமை, சாமை அரிசி  போன்றவற்றில் முக்கிய கனிமங்களான இரும்பு, சிங்க்   போன்றவற்றின் மிகச்சிறந்த ஆதாரமாக இருக்கிறது. இந்த பொருட்களின் ஆர் சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளது. வழக்கமான தானியங்களை விட இதில் அதிகமாக புரதச்சத்து உள்ளது.

பொரித்த பேக் செய்யப்பட்ட தாமரை விதைகள் மற்றும் வேர்க்கடலை சாப்பிடலாம். இவற்றில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. இவற்றின் நெய்யில் பொறித்து உட்கொள்ளலாம். விரத நாட்களில் செய்யும்  இனிப்புக்காக தாமரை விதை கீர் செய்து சாப்பிடலாம். தாமரை விதைகளை கீறி பாலுடன் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்து இதனுடன் பாதம், முந்திரி, பிஸ்தா போன்றவை சேர்ப்பதாலும் ஆரோக்கியமான உணவாகிறது. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து தயாரிக்கலாம். இளநீரில் எலக்ட்ரோலைட் அதிகம் இருப்பதால் நீண்ட நேரம்நீர்ச்சத்தோடு  இருக்க உதவுகிறது. எனவே விரத நாட்களில் தினமும் காலையில் ஒரு கிளாஸ் தேங்காய் நீர் பருகுவது நல்லது. வாழைப்பழம் வால்நட் ஆகிய இரண்டையும் சேர்த்து அரைத்து பருகுவதால் வயிறு நிரம்பியது போன்று உணர்வு தோன்றும் விரத நாட்களில் இந்த பானத்தை குடிப்பதால் சுறுசுறுப்பாக இருக்கும்.