அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பாண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும் ஒரு சிலர் விரதம் இருந்து தேவியை வழிபடுவது வழக்கம்.

நம்முடைய வீட்டில் வராகி அம்மன் சிலை அல்லது பணம் இருந்தால் அதை சுத்தம் செய்து அலங்கரித்துக் கொள்ள வேண்டும். முதலில் செம்பருத்தி அல்லது சிவப்பு நிற பூக்களால் அலங்கரிப்பது சிறப்பானது. இரண்டு விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை என்பதால் ஒரு தீபம் உப்பு தீபமாக ஏற்றுவது சிறப்பு. வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தாலி சரடு, வளையல், கண்ணாடி போன்ற மங்களப் பொருட்களை வாங்கி  வைக்க வேண்டும். குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு தவிர மூன்று வெற்றிலைகளை விசிறி போன்ற அமைப்பில் வைத்து அதன் நடுவில் விளக்கு ஏற்றி வைப்பது நல்லது.