செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னோடு கூடுகின்ற கூட்டம் இரண்டு கட்சியும் வேண்டாம் என்று வெறுத்துப் போய் தான் கூடுகின்றது. இந்த திராவிட கட்சிகளை ஒழிக்கணும் என நினைக்கின்ற மக்கள்….  60 ஆண்டுகள் ஆண்டு எங்களை இந்த நிலைக்கு தள்ளி விட்டுட்டாங்களே என்று வெறுக்கிற மக்கள் தான்,  என் பின்னாடி திரளுறாங்க என்றார்.

உடனே செய்தியாளர் ஒரு தொகுதிக்கு 3000 ஓட்டு வாங்கினால் போதுமா ? என்ற கேள்விக்கு டென்ஷனான சீமான், ஒரு தொகுதிக்கு 25 ஆயிரம் ஓட்டு  வாங்கி இருக்கேன். நீங்க தூக்குல தொங்குறீங்களா ? தூக்குல தொங்குறீங்களா ? 37 ஆயிரம் ஓட்டு வாங்கி இருக்கேன் தூத்துக்குடியில விஷம் குடிக்கின்றீர்களா ? 3000 ஓட்டு எந்த தொகுதியில் வாங்கினேன் என்று சொல்லுங்க…  நான் தீ குளிக்கிறேன்.

தம்பி எதுல வேலை செய்றீங்க ? அவ்வளவு கேவலமா போச்சா உங்க பத்திரிக்கை. உங்க பேர் என்ன சொல்லுங்க ?  உங்க பெயர் என்ன தம்பி ? எந்த பத்திரிக்கை என கேட்க கூடாதுன்னு சட்டம் இருக்கா ? நீ கேள்வி கேட்கணும். கேலி பண்ணக்கூடாது. என்னுடைய செல்வாக்கு சரிந்து இருக்கா ? வளர்ந்து இருக்கா ? சொல்லு..

உடனே பத்திரிக்கையாளர் நான் வளர்ந்திருப்பது போல் பார்க்கவில்லை என்றவுடன்,  அப்ப நீ கோமல இருக்கன்னு நினைக்கிறேன். உடனே பத்திரிகையாளர் நான் கோமாலையே இருந்துக்கிறேன் சார் அப்படின்னு சொன்ன உடனே சீமான், அப்ப போ நீ கோமல இரு. உன் பெயர் என்ன ? உன் பெயரு  சிராஜூதீன்னா என கேட்டார்.

இதை தொடர்ந்து சீமானை கேள்வி கேட்ட நிருபர் சிராஜூதீன்னுக்கு நாம் தமிழர் கட்சியின் ஹீமாயுன் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ வைரலாகி வருகின்றது.