செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி, எங்களை பொறுத்தவரையில் தமிழ்நாடு மக்கள்தான் எங்களுக்கு எஜமானர்கள்.  தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த தமிழ்நாடு மக்கள் தேர்ந்தெடுக்கின்ற எங்களை, பாராளுமன்றத்தில் தமிழ்நாடு மக்களுடைய உரிமைகளை காப்பதற்கு குரல் கொடுப்போம்.  தமிழ்நாடு மக்களுடைய நலனை காப்பதற்கு குரல் கொடுப்போம்.  தமிழ்நாடு மக்களுக்கு தேவையான நிதிகளை பெறுவதில் குரல் கொடுப்போம்.

இங்கே இன்னும் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எங்களைப் போலவே ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் இருக்கிறது. அந்த மாநிலத்தினுடைய முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள் யாரை முன்னிறுத்தி அவர் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறார் ?  ஆந்திராவில் இருக்கின்ற இரண்டு கட்சிகள் யாரை முன்னிறுத்தி,  அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் முன்னிறுத்துகிறார்கள்.

அதோடு மட்டுமல்ல இன்று ”இந்தியா” கூட்டணி என்று சொல்கிறார்களே..  இந்த கூட்டணி யாரை பிரதமர் வேட்பாளர் என்று முன்னிறுத்தி,  இன்று வாக்குகளை சேகரிக்கிறார்கள். எங்களை பொறுத்தவரையில் தமிழ்நாடு மக்களுடைய நலனில் அக்கறை கொண்டு,  அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நிலையிலே எங்களுடைய குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.