தமிழ் சினிமா உலகில் 80, 90களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த கவுண்டமணி 2016 வருடம் வெளியான எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன்பின் ஆறு வருடங்கள் படத்தில் நடிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் பழனிச்சாமி வாத்தியார் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்க யோகி பாபு, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். மேலும் இந்த திரைப்படத்தை சினி கிரியேஷன்ஸ் தயாரிக்க படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. மேலும் அடுத்த மாதம் படபிடிப்பு ஆரம்பமாக இருக்கின்றது.