மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி சாதனை அறிவிப்பு என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் பாராட்டினார். இது பற்றி அவர் கூறியதாவது, உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு இந்தியாவை ஒளிரசெய்துள்ளது. பட்ஜெட் அறிவிப்பின் மூலம் உலக வளர்ச்சியின் எஞ்சினாக இந்தியா மாற உள்ளது. ரயில்வே துறைக்கு ரூ.2,14,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது சாதனை அறிவிப்பு என்றார்.
இந்நிலையில் நடப்பு ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், “கல்கா-சிம்லா வரலாற்று இடங்களுக்கு இடையே முதல் ரயில் இயக்கப்படும். வழக்கமான டீசல் என்ஜின்களுக்கு பதிலாக, இந்த ரயில்களில் உள்ள ஹைட்ரஜன் எரிபொருள் செல்களால் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, ரயிலின் மோட்டார்கள் இயங்கும். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.