தமிழில் வெப்பம் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நானி. இவர் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் குவித்த நான் ஈ படத்திலும் நடித்திருந்தார். இப்போது நானி தசரா திரைப்படத்தில் நடித்து உள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

தற்போது நானி அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது “சில திரைப்படங்கள் பான் இந்தியா படங்களாகிறது. தசரா படம் பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இதனிடையே நிறைய 2ஆம் பாகம் படங்கள் வருகிறது. அதன்படி நான் நடித்த நான் ஈ திரைப்படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது” என்று அவர் கூறினார்.