சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதி உள்ளது. இங்கு ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்றனர். தீ மள மளவென எரிந்ததில் டாஸ்மாக் கடை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் டாஸ்மாக் கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

அதன் பின் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மர்ம நபர்கள் ஏற்படுத்திய இந்த தீ விபத்தில் சுமார் ரூ.35 லட்சம் மதிப்புள்ள சரக்கு பாட்டில்கள் சேதமானது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.