ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கடற்கரையில் பந்து போன்ற மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம பந்தை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இந்த மர்ம பந்து ஒருவித கடல் சுரங்க பொருளாக இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இந்த மர்ம பந்து சுமார் 1.5 மீட்டர் விட்டம் கொண்டுள்ளது என்றும் இது இரும்பாலானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மர்ம பொருளால் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். மக்கள் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமா? என அச்சமடைந்துள்ளனர்.