ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு கர்ப்பிணித்தாய் இறப்பதாக ஐநா வேதனை தெரிவித்துள்ளது. ஐநா அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி கடந்த 20 ஆண்டுகளில் பேறுக்கான இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது எனவும் இருப்பினும் பிரசவத்தின் போது இரண்டு நிமிடங்களுக்கு ஒரு கர்ப்பிணி பெண் உயிர் இழக்கின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 ஆண்டில் ஒரு லட்சம் பிரசவங்களில் 339 தாய்மார்கள் உயிரிழந்திருப்பதாகவும் 2020 ஆம் ஆண்டு 223 தாய்மார்கள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு பதிவான இறப்புகளில் 70 விழுக்காடு இறப்புகள் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.