அமெரிக்காவில் மத்திய மேற்கு பகுதிகளை தாக்கிய ஆற்றல்மிக்க பனி புயலால் ஐந்து மாகாணங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ உள்ளிட்ட ஐந்து மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கடும் பனிப்பொழிவை அடுத்து நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் உரை பனி தொடர்ந்துள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் என அனைத்தும் பனியால் சூழப்பட்டு வெண்பனி மூடியது போல காட்சி அளிக்கிறது. மணிக்கு 97 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த குளிர் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். சுமார் 20 அங்குலம் அளவுக்கு உரை பனி கொட்டியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 நகரங்களில் அவசரநிலை பிரகனம் செய்யப்பட்டுள்ளது.