பேருந்தை சொகுசு வீடாக மாற்றி உலகம் முழுவதும் தங்களுடைய குழந்தைகளுடன் சுற்றி வரும் ஜெர்மன் தம்பதி தற்போது மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரை சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் துபாயில் உள்ள தனியார் கம்பெனியில் 1 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வந்தனர். உலகை சுற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் பேருந்து வாங்கிய இவர்கள் அதனை வீடாக மாற்றி உலகை சுற்ற முடிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி தங்களது சொகுசு பேருந்தில் பயணத்தை துபாயில் தொடங்கினர்.

பிறகு ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று சுற்றி பார்த்த இந்த தம்பதியினர் 200 நாட்களைக் கடந்த சிறுதினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியா வந்த அவர்கள் பஞ்சாப், உத்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு பேருந்தில் மாமல்லபுரம் வந்துள்ளனர். அடுத்ததாக இந்திய பயணத்தை முடித்துவிட்டு நேபாளம், மியான்மர், மாமல்லபுரம் வந்துள்ளனர். அடுத்ததாக இந்திய பயணத்தை முடித்துவிட்டு நேபாளம் மியான்மர், கொலம்பியா ஆகிய நாடுகள் வழியாக சென்று அமெரிக்காவில் தங்களது சொகுசு பேருந்தில் பயணத்தை நிறைவு செய்ய இந்த குடும்பம் திட்டமிட்டுள்ளனர்.