பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரின் மனைவி கௌரி கான். இந்த தம்பதிகளுக்கு ஆரியன் கான், சுகானா மற்றும் ஆப்ராம் என்ற மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். கௌரிகான் வீட்டை கவனித்துக் கொள்வதோடு இன்டீரியர் டிசைனராகவும் இருக்கிறார்.

இவர் பல பாலிவுட் பிரபலங்களின் வீடுகளுக்கு இன்டீரியர் டிசைன் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கௌரி கான் தற்போது My life in design என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஷாருக்கான் தன் மனைவிக்கு 40 வயது என்று கூறினார். உடனே அவரை நிறுத்திய கௌரி கான் எனக்கு 37 வயது தான் ஆகிறது என்று கூறினார். இதைக் கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் சில நிமிடங்கள் சிரித்தனர்.