பெங்களூருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் காவேரி மருத்துவமனையின் கார்டியாலஜி இயக்குனராக உள்ளார். இந்நிலையில் இவர் தனது மருத்துவ பயணத்தின் ஆரம்ப காலங்களில் ஒரு உறவினரால் தொடர்ந்து அவமதிக்கப்பட்ட சம்பவத்தைக் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் உங்கள் சம்பளத்தை பற்றி உறவினர்கள் யாராவது கேட்டால் எப்படி தவிர்க்கிறீர்கள்? என்று கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, மருத்துவம் போன்ற கடினமான பாடத்தை தேர்வு செய்ததற்காக உறவினர் ஒருவர் என்னை தொடர்ந்து கேலி செய்தார். அதோடு மற்றவர்கள் எல்லாம் சம்பாதிக்கும் போது நீ இன்னும் அப்பாவை நம்பி இருக்கிறாயே என்று கூறினார். இந்தியாவில் மருத்துவம்  படிக்க நீண்ட ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் பல துறைகளில் உள்ளவர்கள் உடனே படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்து பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளாத அவர்கள் என்னை அவமதிக்கும் வகையில் பேசினார்.

ஆனால் அதன் பின் நான் ஒரு மருத்துவ வல்லுனராக உயர்ந்த பிறகு, அதே உறவினர் ஒரு நாள் என்னிடம் சம்பளம் பற்றி கேட்டபோது, நான் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தேன். அந்த உறவினருக்கு பதில் அளிக்கும் வகையில், டாக்டர் என் வருடாந்திர வரி கட்டணம் உன் இரண்டு பிள்ளைகளின் வருடாந்திர சம்பளத்தை விட அதிகம் என்று கூறியுள்ளார். அதோடு தொழில் பற்றிய அறிவு இல்லாமல் யாரையும் குறைத்து பேசக்கூடாது. உழைப்புக்கு இறுதியில் நல்ல பலன் கிடைக்கும் என்பதையும் விளக்கியுள்ளார். இந்த பதிவு #satisfaction என்ற ஹாஷ்டேக்குடன் இணையதளத்தில் பரவியது. இதற்கு இளைஞர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.