சென்னை ஷெனாய் நகரில் திமுக சமூகவலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின்  பேசினார். அமைச்சர் டிஆர்பி ராஜா அவர்கள் என்னிடம் வந்து சோசியல் மீடியாவுல தீவிரமா செயல்படக்கூடிய தன்னார்வலர்கள் உங்களை சந்திக்கும் வேண்டுமென்று சொன்னார்கள். அவர் சொன்னவுடனே அவங்கள சந்திக்க நான் தான் ரொம்ப ஆசையா இருக்கேன் அப்படின்னு சொல்லி,  உங்களை சந்திக்க இன்னைக்கு வந்து இருக்கிறேன்.

என்னுடைய பெயர், நான் யாரு ? என்னுடைய பயோடேட்டா என்ன ?  எல்லாம் நல்லா உங்களுக்கு தெரியும். ஆனால் உங்களில் பலருடைய பெயர் கூட எனக்கு தெரியாது. சிலரோட Facebook,  ட்விட்டர் ஐடி தெரியும்.  ஆனால் அது இவங்க தான்னு தெரியாது. இருந்தாலும் எல்லாருடைய பதிவுகளையும் என்னுடைய டவுன் லைன்ல படிச்சிருக்கேன்,  ரசித்து இருக்கேன். சில நேரம் அடடா எவ்வளவு நல்லா எழுதி இருக்காங்கன்னு வியந்து இருக்கேன்,  சிரிச்சிருக்கேன்.

சிலர் நீண்ட பதிவுகள் எழுதுவீங்க, சிலர் ரத்தின சுருக்கமா சிறுசா எழுதுவீங்க. சிலர் மீம்ஸ் போடுவீங்க, சிலர் பழைய விஷயங்களை எல்லாம் மறுபடியும் ஞாபகப்படுத்துவீங்க. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஸ்டைல். ஆனால் அது எல்லாமே திமுக ஸ்டைல். அதனால உங்க ஊரு,  பெயர், தெருவு எல்லாம் என்ன ? நாம எல்லாரும் திமுககாரங்க தானே..

தலைவர் கலைஞர் உடன்பிறப்புகள் தானே…. உங்களில் ஒருத்தன் தானே நானு…. இந்த பந்தமும்,  பாசமும் மட்டும் தான் என்னைக்கும் மாறவே,  மாறாது. ஏன் டைம் லைன்ல சிலரோட பதிவுகள் மிஸ் ஆனாலும்,  ஐடிவிங்,  செய்தித்துறை, உளவுத்துறை, என்னுடைய நண்பர்கள் பலரும் உங்களுடைய பதிவுகளை எனக்கு அனுப்பி வச்சுக்கிட்டு தான் இருக்காங்க. அந்த வகையில நான் உங்களுடைய பாலோவர்.

பார்க்காமலேயே நண்பர்களாக இருந்த கோப்பெருஞ்சோழன் மற்றும் பிசிராந்தையார் போல தான் நம்முடைய நட்பும்,  உறவும். அந்த நட்பு உணர்வோடு தான் உங்களை நான் இன்னைக்கு பார்க்க வந்திருக்கிறேன். இந்த சந்திப்புல நான் ஷேர் பண்ற செய்திகளை,  நீங்கள் லைக் பண்ணுவீங்கன்னு நம்புறேன். லைக் பண்ணா மட்டும் போதாது,  அதை நீங்கள் ரீ ஷேர்  பண்ணனும். பண்ணுவீங்க தானே.. பண்ணுவீங்க தானே என தெரிவித்தார்.