தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவின் தீவிர ரசிகர் கூல் சுரேஷ். இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு கொடுத்த பப்ளிசிட்டிக்கு பின் அனைத்து திரைப்படங்களுக்கும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கின்றார். இவர் விமர்சனம் சொல்லும்போது செய்யும் அலப்பறைகளுக்கு அளவில்லை. இந்த நிலையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை அடுத்து தற்போது சிம்புவின் பத்து தல திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் கூல் சுரேஷ் கலம் இறங்கி இருக்கின்றார்.

அந்த வகையில் நேற்று இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் செய்தது கலாய்க்கும் அளவிற்கு சோசியல் மீடியாவை டிரெண்டாகி வருகின்றது. பத்து தல திரைப்படத்தின் FDFS காட்சிக்கு ஹெலிகாப்டரில் வருவேன் என தெரிவித்திருக்கின்றார் கூல் சுரேஷ். இதற்கு தயாரிப்பாளர் பயப்பட வேண்டாம் எனவும் நான் உங்க பட்ஜெட்டில் கை வைக்க மாட்டேன் எனவும் எனது சொந்த வீடு, பக்கத்து வீடு எல்லாத்தையும் வித்தாவது என் தலைவன் படத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து மலர் தூவ போவதாக தெரிவித்திருக்கின்றார். இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.