பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2026ஐ முன்னிட்டு, பகல்பூரில் உள்ள ஹவாய் அட்டா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், கோபால்பூரைச் சேர்ந்த பிரகாஷ் மண்டல் என்ற தேநீர் விற்பனையாளரின் செயல் அனைவரையும் புன்னகைக்க வைத்தது. இவர், கூட்டத்திற்குத் தனது ஆடுகளைக் கட்டி இழுத்துச் சென்ற சிறிய வண்டி ஒன்றில் வித்தியாசமாக வந்தார் . இந்த அசாதாரண நுழைவு அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான கூட்டத்தினரிடையே மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது.
बकरे पर बैठकर मोदी की रैली में पहुंचा शख्स #NarendraModi @narendramodi | Narendra Modi pic.twitter.com/re2r2VPUAH
— News24 (@news24tvchannel) November 6, 2025
அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் தங்கள் கைப்பேசிகளில் இந்த அரிய காட்சியைப் பதிவு செய்ததால், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. இது குறித்துப் பேசிய பிரகாஷ், “நான் மோடிஜியின் பெரிய ரசிகன். அதேபோல என் ஆடுகளும் மோடிஜியின் ரசிகர்கள் என்பதால், ஆடுகளைக் கூட்டி வந்தேன். ஆடுகள் எனக்கு மிகவும் பிரியமானவை” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரது இந்த விசித்திரமான பக்தியைக் கண்டு, கூட்டம் முழுவதும் “மோடி, மோடி” என்று முழக்கமிட்டு அவரை உற்சாகப்படுத்தியது.
