திண்டுக்கல் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 7 பேர் வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கி கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதிகளை சுற்றி நாள்தோறும் சில கும்பல்கள் வேட்டை நாய்களைக் கொண்டு அங்குள்ள காட்டு முயல்களை தொடர்ச்சியாக வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவலானது அளிக்கப்பட்டது. கிடைக்கப்பெற்ற   தகவலின் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக திடீர் சோதனையில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 

அப்போது வனப்பகுதி அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக ஏழு நபர்கள் சுற்றித் திரிய அவர்களைப் பிடித்து விசாரிக்கையில் அவர்கள் முயல்களை வேட்டையாடவந்தது  தெரிய வர,அவர்கள் மீது  வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் ஏழு பேருக்கும் சேர்த்து ரூபாய் 2 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் இது போன்ற செயல்களில் மீண்டும் யாரேனும்  ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்து சென்றுள்ளனர்.