விவசாயிகள்  நிலையான மாத வருமானம் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

எண்ணெய் பனை நட்டு வைத்து வளர்த்து அதன் மூலம் பொருளாதார அடிப்படையில் எவ்வளவு பயன் பெறலாம்  என்பதை உணர்த்தும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயனுள்ள வகையில் பாமாயில் சாகுபடி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை நடத்த திட்டமிட்டு அதனை அம்மாவட்ட ஆட்சியர் நேற்று தொடங்கி வைத்தார்.  நிகழ்வில் பேசிய அவர்,  கடந்த 15 ஆண்டுகளில் எண்ணெய் விலையில்  ஏற்ற இறக்கம் இருந்தாலும்,  அதனால் அதை உற்பத்தி செய்த விவசாயிகள் நஷ்டம் அடைந்ததில்லை.

  எனவே,  அதை எடுத்து பயன்படுவது ஆகச் சிறந்த புத்திசாலித்தனம்.  இதை செய்வதற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து 100% மானியம் வழங்கப்படும்.  அதேபோல் 2.5 ஏக்கரில் 143 மரங்கள் நடலாம்.  இவை வளர்ந்து எண்ணெய்  உற்பத்திக்கு தயாராவதற்கு மூன்று வருடங்கள் கால அவகாசம் எடுக்கும்.  இந்த மூன்று வருடங்களில் விவசாயிகள் ஊடுபயிராக மற்ற பயிர்களை வளர்க்கலாம்.  அப்படி வளர்க்கப்படும் பயிர்களுக்கு  அரசு தரப்பிலிருந்து ரூ 10,500 என்ற அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். 

மூன்று வருடத்திற்கு பின் அறுவடைக்கு தயாராக இருக்கும் மரங்களிலிருந்து,  வருடத்திற்கு 2.5 ஏக்கருக்கு 43 டன் என்ற அளவில் பாமாயில் எடுக்க முடியும்.  இதன் மூலம் ஐந்து லட்சத்து 50 ஆயிரம் என்ற அளவில் வருமானத்தை ஈட்ட முடியும். குறைந்தபட்சம் 25 லிருந்து 30 வருடங்கள் இதன் மூலம் நிலையான மாத வருமானத்தையும் விவசாயிகள் தேடிக்கொள்ள முடியும் என்பதால் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கூறினார்.