ஓட்டப்பிடாரம் பகுதி அருகே லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கப்பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை அடுத்த அக்கநாயக்கன்பட்டி ஊரைச் சேர்ந்த நாகராஜ் என்கிற நபர் கூலிவேலை செய்து வந்துள்ளார்.  இவர் பட்டா ஒன்றை மாற்றம் செய்வதற்காக 2010ல் அப்போதைய அப்பகுதி கிராம நிர்வாக அலுவலராக இருந்த சந்திரா என்பவரிடம் மனு கொடுத்துள்ளார்.  அதைப் பெற்ற அவர் பட்டா மாற்றம் செய்வதற்கு பரிந்துரைப்பதற்காக மட்டுமே ரூபாய் 500 லஞ்சம் கேட்டுள்ளார். 

இதனால் விரக்தி அடைந்த நாகராஜ் தூத்துக்குடி ஊழல் தடுப்பு பிரிவினரிடம் புகார் அளிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நாகராஜ் சந்திர அவர்களிடம் சரியாக மார்ச் 15, 2010ல்  அன்று 500 ரூபாய் கொடுக்கும்போது மறைந்திருந்த ஊழல்  தடுப்பு துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் சந்திராவை கைது செய்தனர். 

பின்  அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  நேற்றைய தினம் நீதிபதிகளால் தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதில்,  ஊழல் செய்த கிராம நிர்வாக அலுவலர் சந்திரா அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும்,  ரூபாய் 45 ஆயிரம் அபராத பணமும் விதித்து  நீதிமன்றம் உத்தரவிட்டது.