நாடு முழுவதும் இருக்கக்கூடிய மூத்தக்குடிமக்களுக்கு பல வசதிகள் இப்போது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூத்தக்குடிமக்களுக்கு ரயில்வே மற்றும் வங்கிகள் வரை பல்வேறு பணிகளில் அரசிடமிருந்து விலக்களிக்கப்படுகிறது. அதன்படி இனிமேல் மூத்தக்குடிமக்கள் இலவசமாக விமானத்தில் பயணம் மேற்கொள்ள முடியும். இந்நிலையில் தற்போது மத்திய அரசுடன் மாநில அரசும் பல்வேறு வகையான வசதிகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மூத்தகுடிமக்களுக்கான சிறப்பு வசதியை தொடங்கி வைத்தார். அதாவது, அவர்கள் விமானத்தில் பயணம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இந்த தீர்த்த தரிசன திட்டத்தில் பல்வேறு இடங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதோடு புனித ரவிதாஸ் பிறந்த இடமும் இவற்றில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த தீர்த்த தரிசனம் யோஜனா திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு அதிகமான மூத்தக்குடிமக்கள் அரசின் முழு செலவில் யாத்திரை ஸ்தலங்களுக்கு போகலாம்.