துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அதோடு 5 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு நிலநடுக்கத்தில் இறந்ததை அடுத்து துருக்கி அரசானது 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் தொடர் நிலநடுக்கங்கள் துருக்கி மற்றும் சிரியாவை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்நிலையில் இவ்வளவு சோகத்திற்கு மத்தியிலும் சிரியாவில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை வெளியே கொண்டு வந்த ஊர் மக்கள், குழந்தைக்கு “மிராக்கிள்” என பெயரிட்டுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக பிரசவித்த உடனே தாய் இறந்துவிட்டார்.