திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் திரண்டனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.