கர்நாடக சட்டப் பேரவையில் 2023-24 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் இன்று(பிப்,.17) தாக்கல் செய்யப்படுகிறது. கர்நாடக சட்டமன்றத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. அப்போது கர்நாடகா ராமநகரத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என பசவராஜ் பொம்மை அறிவித்துள்ள நிலையில், இதற்கு பா.ஜ.க-வினர் வரவேற்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த பட்ஜெட் போலியானது என்று கூறி எதிர்கட்சியான காங்கிரஸ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காதில் பூ வைத்து வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.