பிரபல பல்பொருள் அங்காடிகளில் ஒன்றான டி-மார்ட்டில் ஷாப்பிங் செய்த பெண் ஒருவர், பில் தொகையைக் கவனித்தபோது அதில் அச்சிடப்பட்ட எம்.ஆர்.பி விலையை விடக் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பில் கவுண்டருக்குச் சென்ற அந்தப் பெண், அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிப்பது ஏன் என்று அங்கிருந்த ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது வாடிக்கையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டி-மார்ட் ஊழியர்கள், அண்மையில் சர்க்கரை விலை அதிகரித்துவிட்ட காரணத்தால்தான் விலையும் உயர்ந்துள்ளதாகச் சமாளித்துள்ளனர். தற்போது நிலவும் வதந்திகளைச் சாதகமாகப் பயன்படுத்தி, சில வியாபாரிகள் தங்களுடைய இஷ்டப்படி சர்க்கரைக்கு விலையை நிர்ணயித்து விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

“>

 

இதுபோன்ற முறைகேடுகள் பொதுமக்களைப் பெரிதும் பாதிப்பதால், எந்தவொரு கடையிலும் MRP விலைக்கு மேல் ஒரு ரூபாய்கூடக் கூடுதலாக வசூலிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.