ராயன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் ′நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்′ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் குமார், இசை அமைத்துள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியான முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற 10-ம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் அனிகா, தாமஸ் மற்றும் சக நடிகர்கள் பாரில் உட்கார்ந்து இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.