பெரும்பாலான மக்கள் புது இடங்களை பார்க்க வேண்டும் என்றும், பயணங்கள் செய்ய வேண்டும் என்றும்  விரும்புவார்கள். இவ்வாறு புது புது இடங்களுக்கு சென்று, அதை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவிடுபவர்களுக்கு அதிகரித்துள்ளனர். இப்படி வீடியோவை எடுத்து யூடியூபில் பதிவிடுபவர்கள் VLOGGER என்று அழைக்கப்படுகின்றனர். அந்த வகையில் ONRoad India என்ற யூடியூபர் ஒருவர் ஈரானுக்கு சென்றுள்ளார். அங்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவர் உதவி செய்துள்ளார். அதாவது ஈரான் விமான நிலையத்திற்கு சென்ற பிறகு, அங்கு வைத்து ஹீசைன் என்ற பாகிஸ்தானிய இளைஞனை சந்தித்துள்ளார்.

அவர் ஈரானில் பயின்று வரும் மாணவர். இந்நிலையில் இந்தியரின் செல்போனில் நெட்வொர்க் பிரச்சனை இருந்துள்ளது. எனவே அதை ஹீசைன் தீர்த்துள்ளார். அதற்கு அவர் முதல் இந்தியரை தனது வீட்டிற்கு டாக்ஸி மூலம் அழைத்துச் சென்று, அவரை கீழே நிற்க வைத்துவிட்டு, ஹீசைன் மாடிக்கு சென்றுள்ளார். இதை இந்தியர் தனது வீடியோவில் தனக்கு ஏற்பட்ட நிலைமையை குறித்து தெரிவித்தார். அதன் பின் ஹீசைன் நெட்வொர்க் கிடைக்கும் சிம் கார்டை வழங்கியது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதன் பின் இந்தியர், ஈரானில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தார். இதை அனைத்தும் வீடியோ ஆக்கப்பட்டு வெளியிடவே யூடியூபில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இது வேறு சில சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.