கிரம்ப்ளின் மாளிகை புதினின் இந்தியா வருகை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி அதிகாரி யூரி உஷாகோவ் கூறியதாவது, நமது இரு நாட்டுத் தலைவர்களும் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சந்திக்க முடிவு எடுத்துள்ளனர். இந்த முறை பிரதமர் மோடியின் அழைப்பை பெற்றுள்ளோம். இது குறித்து நிச்சயமாக பரிசீலிப்போம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா பயணம் செல்லும் வகையில் தேதிகளை முடிவு செய்வோம் என்று அவர் கூறினார்.
இதற்கு முன்னதாகவே ரஷ்யாவுக்கு உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது இந்திய பிரதமர் மோடி புதினை இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக கிரெம்ப்ளின் மாளிகை உறுதி செய்துள்ளது. இதனால் புதின் அடுத்த ஆண்டு இந்தியா பயணம் மேற்கொள்வார் என எதிர்பாக்கப்படுகிறது.