மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இந்திய மேலாண் மையம் எனப்படும் கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிலையம் இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் நீர்நிலைகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் பெரிய உருவம் கொண்ட உடும்பு வகையை சேர்ந்த பெரிய பல்லிகள் காணப்படுகிறது. இவை பெரியவகை பாம்புகள், சிறிய முதலைகள் உள்ளிட்டவற்றை கூட உணவாக உண்ண கூடியவை ஆகும்.

நிலத்தில் வாழக்கூடிய இந்த வகை பல்லிகளில் ஆண் பல்லிகள், பெண் பல்லிகளை கவர தங்களுக்கு உட்பட்ட நில எல்லைகள் என தெரிவிக்க மற்றொரு ஆண் பல்லியுடன் மோதிக்கொள்ளும். இது போன்ற ஒரு காட்சி கொல்கத்தா ஐஐஎம் மையத்தின் வளாகத்தில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் உருவில் பெரிய இரண்டு பல்லிகள் எழுந்து நின்றவாறு மோதிய வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.