சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் 28 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவித்தார். அவர் கூறியதை நம்பி வங்கி கணக்கிற்கு இளம்பெண் ஆன்லைன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 597 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் கூறியபடி அந்த நபர் பகுதி நேர வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் மாவட்ட சைபர் கிரைம் போலீசி்ல் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.