லோக்சபா தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகளை பரப்புரையில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் விதிகளை பாஜக மீறியதாக திமுக குற்றம் சாட்டியது, இதனால் பள்ளி மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்,  பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் யாரேனும் புகார் அளித்துள்ளார்களா ? பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் யாரேனும் குழந்தைகளுடன் இருந்தார்களா ? இந்த வழக்கில் சிறார் நீதிச் சட்டம் பொருந்துமா ? உள்ளிட்ட  கேள்விகளை எழுப்பிய நீதிபதி, காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 8 ஆம் தேதி வரை ஒத்திவைத்து, பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தற்காலிக தடைவிதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.