செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”இந்தியா”  என்பதை ”பாரத்” என்பதால் ”இந்தியா” என்கின்ற வார்த்தையும், ”பாரத்” என்கின்ற வார்த்தையும் இன்டர் சேஞ்சர்.  எல்லா இடத்திலும் ”பாரத்” என்றும் சொல்லிக் கொள்ளலாம். சில இடங்களில் ”இந்தியா” என்றும் சொல்லிக் கொள்ளலாம். அரசியலமைப்பு சட்டத்துல ரெண்டு இடத்துலயும் இருக்கு.”இந்தியா” தட் இஸ் ”பாரத்” அரசியலமைப்பு சட்டம் நன்கு அறிந்த அனுபவசாலிகள் நிறைய பேர் சொல்லுறாங்க…

”இந்தியா” என்கின்ற வார்த்தையை ”பாரத்” என்றும், ”பாரத்” என்கிற வார்த்தையை ”இந்தியா” என்றும் போட்டிங்கனா…  அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவித மாற்றமும் தேவை இல்லை. எந்த ஆவணத்தையும்…. எங்கேயும் மாற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. இரண்டும் ஒரே வார்த்தை. ஒன்றை தான் குறிக்குது. உதாரணத்திற்கு அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தன்மைன்னு வச்சி இருக்கோம்.

அதை மாற்ற வேண்டுமென்றல் ? ஆர்டிகள் 368 அமல் படுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை நன்கு அறிந்த அறைஞர்கள் அதை தான் சொல்கிறார்கள். அதனால இன்னைக்கு பாரதம் என்கிற வார்த்தை அதிகாரப்பூர்வமாக நம்முடைய பிரதமர் அவர்கள் இரண்டு, மூன்று இடத்துல பயன்படுத்திட்டாங்க… உதாரணத்திற்கு G- 20 வட்ட மேசையில் பிரதமரின் பெயர் பலகையில் ”பாரத்” என இருந்துச்சு. அழைப்பிதழில் ”பாரத்” என இருந்துச்சு. இது வந்து அரசியலமைப்பு சட்டத்தின்படி சரி தான் என தெரிவித்தார்.