
சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் இருந்து உள்வட்ட சாலை வழியாக ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை நோக்கி வேகமாக சென்ற சொகுசு கார் நங்கநல்லூர் 24-ஆவது தெரு சந்திப்பில் வைத்து ஒரு மொபட் மீது பயங்கரமாக மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த வழியாக வந்த ஆட்டோ மீது மோதி நின்றது. இந்த விபத்தில் மொபட்டில் வந்த ராஜ்கௌதம்(17), ஆட்டோ டிரைவரான சிவராமகிருஷ்ணன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராஜ்கௌதம் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சிவராமகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார் டிரைவரான நரேந்திரகாந்த் என்பவரை(28) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.