காஞ்சிபுரம் அருகில் கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பாக கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அங்கு வசிக்கும் மகளிர்களுக்காக புதிய மகளிர் பேருந்து சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி எம்.பி எழிலரசன் கலந்துகொண்டு கொடியசைத்து புதிய மகளிர் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார். இதையடுத்து அந்த பேருந்தை தானே இயக்கினார். அப்போது பேருந்தில் காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், ஒன்றியக்குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அப்பகுதி குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகள், மகளிர்கள், முதியவர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

காஞ்சிபுரம் எம்எல்ஏ அந்த பேருந்தை குடியிருப்பிற்கு வெளியில் ஓட்டி சென்றார். இந்நிலையில் வளைவு ஒன்றில் பேருந்தை அவர் திருப்ப முயன்றபோது எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கிக்கொண்டது. உடனே பேருந்துக்குள் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அனைவரின் உதவியுடன் பேருந்து பள்ளத்திலிருந்து மீட்கபட்டு, ஓட்டுநர் இயக்கத்தில் அனைவரும் குடியிருப்புகளுக்கு திரும்பினர்.