சிவகங்கையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது வீரமும் விவேகமும் விளைந்த மண்ணாக சிவகங்கை வழங்குகின்றது. இதில் தி.மு.க ஆட்சி அமைந்தாலே நலத்திட்ட உதவிகள் இந்த ஊரை தேடி வரும். அதோடு உங்கள் ஒவ்வொருவர் குடும்பத்திலும் நான் உறவாக இருக்கிறேன் என்று கூறினார்.

  • மேலும் பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை-    தொண்டி தேசிய நெடுஞ்சாலை சிவகங்கை புதிய நகராட்சி கட்டிடம், 59 திருக்கோவிலில் ரூபாய் 14 கோடி செலவில் கோவில் திருப்பணி, மாணவர்களுக்கு தங்கும் விடுதி, மருத்துவமனை விரிவாக்கம், நியூ ஐடி பார்க், தியாகி ஜீவானந்தம் மணிமண்டபம், செட்டிநாடு வேளாண் கல்லூரி, சிவகங்கை மாவட்டத்தில் பல ஊர்களில் ரூபாய் 616 கோடி செலவில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளது.
  • அதோடு எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் பல திட்டங்களை நிறைவேற்றி வருகின்றோம் என்று கூறினார்.
  • மேலும் திண்டுக்கல், காரைக்குடி செல்லும் வாகனங்கள் திருப்பத்தூருக்குள் வராமல் செல்ல ரூபாய் 50 கோடியில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும்.
  • சிவகங்கை அலுவலகத்திற்கு புதிதாக ரூபாய் 89 கோடியில் கட்டடம் கட்டப்படும்.

காரைக்குடி மாநகராட்சிக்கு ரூபாய் 30 கோடியில் புதிய அலுவலகம் கட்டி தரப்படும் என்றும் கூறினார். அதோடு இன்னொருவரின் அறிக்கையை காப்பியடித்து அறிக்கை கொடுக்கின்றார். திண்ணையில் அமர்ந்து பேசுவது போல் வெட்டிகதை பேசுகின்றார் எடப்பாடி பழனிசாமி. இதில் எதிர்க்கட்சி தலைவர் போடும் கணக்குகள் அனைத்தும் தப்பு கணக்கு தான் என்று கூறினார். இதனை தொடர்ந்து மகளிர்க்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் எனக் கூறிய அதிமுக அதனை நிறைவேற்றியதா என்றும், 58 வயதிற்கு மேல் உள்ளோருக்கு இலவச பஸ் பாஸ், பொது இடத்தில் வைஃபை வசதி என வெற்றி வாக்குறுதி அளித்தது அதிமுக தான் என்று கூறினார்.

பதவிக்காக மட்டும் டெல்லிக்கு சென்றனர் அதிமுகவினர். 2013-ம் ஆண்டு முதல் தமிழகத்தை பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது எடப்பாடி பழனிசாமி தான் என்று கூறினார். தவழ்ந்து தவழ்ந்து தமிழ்நாட்டை தரைமட்டத்திற்கு கொண்டு வந்த எடப்பாடி திமுக அரசை வீழ்த்த நினைக்கின்றார். 2021 தேர்தலுக்கு திமுக சார்பில் கொடுத்த 55 வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகள் நிறைவேற்றம். மேலும் 116 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய உள்ளது. மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை செலவு செய்கின்றோம். தமிழ்நாட்டில் திவாலாக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் நோக்கமா? அரசின் எந்த திட்டத்தை வீண் செலவு எனக் கூறுகின்றார். எங்களின் செயல்பாடுகளை நினைவில் கொண்டு திமுக ஆட்சியை திட்டங்களுக்கு மக்கள் அளிக்கும் முதல் மதிப்பெண் போதும் என்றும் அவர் கூறி உரையை முடித்துக் கொண்டார்.