புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பட்டத்திக்காடு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இவர்கள் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் அப்பகுதியில் இருக்கும் சித்தி விநாயகர் கோவில் அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு ஆடு, அதிசய குட்டியை ஈன்றது. அந்த குட்டிக்கு ஒரு தலை, 2 உடல்கள், 4 காதுகள், 8 கால்கள் இருந்ததை கண்டு கணவன், மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அறிந்த ஊர் மக்கள் ஆட்டுக்குட்டியை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சிறிது நேரத்தில் அந்த ஆட்டுக்குட்டி இறந்துவிட்டது.