Xiaomi துணை பிராண்ட் Redmi கடந்த வருடம் நாட்டில் குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் Redmi 11 Primeஐ அறிமுகம் செய்தது. இந்த மொபைல் ரூ.12,999-க்கு விற்பனைக்கு வந்தது. இதன்  விலையானது இப்போது மேலும் குறைக்கப்பட்டு உள்ளது. நிறுவனம் நேரடியாக அதன் விலையை ரூ.2,000 குறைத்திருக்கிறது. அதோடு இந்த விலை குறைப்பு மே 11 முதல் Redmi 11 Prime-ன் அனைத்து மெமரி வகைகளுக்கும் பொருந்தும்.

Redmi 11 Prime-ன் பழைய விலையானது 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.12,999-க்கும், 6ஜிபி ரேம்+128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ரூ.14,999-க்கும் விற்பனையானது. தற்போது விலை குறைக்கப்பட்டு புது விலை வெளியாகி உள்ளது. அந்த வகையில் Redmi 11 Prime புது விலை 4ஜிபி ரேம்+64ஜிபி சேமிப்பு ரூ.10,999-க்கும், 6gp ரேம்+128gp சேமிப்பு ஸ்மார்ட்போன் ரூ 12,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.