பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து நாட்டில் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் சில ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதாவது, அரசு பணிகளில் ஈடுபட்டுள்ள சில சிறப்பு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைபடுத்த அரசு முடிவுசெய்துள்ளது. இது தொடர்பாக  டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது.

மத்திய துணை ராணுவப் படைகள் (CAPF) பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை பெறுவார்கள் என உயர்நீதிமன்றம் தகவலளித்துள்ளது. இது ஆயுதப்படை என்பதால் இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன் கிடைக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

மத்திய ஆயுதப் படை போலீஸ் படையில் பணிப்புரியும் அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத்தினை மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து 8 வாரங்களுக்குள் தேவையான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பால் ஆயிரக்கணக்கான முன்னாள் ராணுவத்தினர் பெரும் நிவாரணம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது..