லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் “லியோ” படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.

இந்நிலையில் லியோ படத்தில் விஜய்சேதுபதி இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த படத்தில் பின்னணி குரல் கொடுப்பதற்காக லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதியை சந்தித்து 3 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளதாக சமூகவலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் -விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய “மாஸ்டர்” படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.