டைரக்டர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் படம் “சாகுந்தலம்”. இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ்மோகன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அண்மையில் சமந்தா மற்றும் சாகுந்தலம் படக்குழுவினர் ஐதராபாத்திலுள்ள ஸ்ரீ பேடம்மா தள்ளி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தனர். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் சமூகவலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.