டைரக்டர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக கொண்டு தயாராகி வரும் படம் “ஆதிபுருஷ்”. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்து இருக்கின்றனர். இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்களானது இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் ராவணன் கதாபாத்திரம் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. மோசமான விஎப்எக்ஸ் படத்துக்கு பெரும் பின்னடைவாக இருகிறது. இதனால் ஓம் ராவத் மீது நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநவமி அன்று படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

அதில், ராமராக பிரபாஸ், சீதாவாக கீர்த்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே போன்றோர் இருந்தனர். இப்போது வெளியாகியுள்ள புது போஸ்டர் படக்குழுவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை சகினாக்கா காவல் நிலையத்தில் மும்பை ஐகோர்ட்டு வழக்கறிஞர்களான ஆஷிஷ் ராய் மற்றும் பங்கஜ் மிஸ்ரா வாயிலாக சஞ்சய் தினாநாத் திவாரி என்பவர் இந்து மத கதாபாத்திரங்களை தவறாக சித்தரித்துள்ளதாக சொல்லி புகார் கொடுத்துள்ளார்.