தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம்ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சமீபத்தில்  இன்ஸ்டாகிராம் கணக்கை ஓபன் செய்தார். அதிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் அவரை 10 லட்சம் பேர் பின் தொடர ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து இன்ஸ்ட்டாவில் விஜய் முதல் ஸ்டோரியை வைக்க அதுவும் வைரலானது.

இந்நிலையில் நடிகர் விஜய் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு 60 லட்சம் ஃபாலோயர்சை தொட்டு உள்ளது. தென்னிந்திய அளவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் அவரை கொண்டாடும் வகையில் விஜயின் ரசிகர்கள் #ThalapathyonINSTAGRAM ஹேஸ் டேக்கை வைரல் ஆக்கி வருகின்றனர்.இன்ஸ்டால் தளத்தில் கணக்கை வெறும் நான்கு நாட்களில் இவ்வளவு பாலோயர்ஸ் தொடுவது இதுவே முதல் முறையாகும்.