சமீபத்தில் பா.ஜ.க-வில் இருந்து விலகிய காயத்திரி ரகுராம், தமிழக பா.ஜ.க தலைவராகவுள்ள அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்குவதற்கு தயாரா? என பாஜக தலைவருக்கு சவால் விடுத்து உள்ளார் காயத்திரி ரகுராம். இது தொடர்பான அவர் டுவிட்டர் பதிவில், “அண்ணாமலை நீங்கள் தமிழ்நாட்டில் மிக பெரிய தலைவர். ஓப்டிக்ஸ் படி உங்களுக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றியடையலாம்.
ஈரோடு இடைத் தேர்தலில் நீங்கள் ஏன் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக் கூடாது?. இடைத் தேர்தலில் கூட்டணியில் உள்ளீர்களா? (அ) தனித்து போட்டியிடுகிறீர்களா? (அ) சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடியுமா?. இடைத் தேர்தலுக்காக குழுவை அமைத்துள்ளீர்களா?. ஆகவே நீங்கள் போட்டியிடுகிறீர்களா? இல்லையா? என்பதனை ஏன் அறிவிக்கக்கூடாது. அதற்காக ஏன் ஒரு குழு?” என கேள்வி எழுப்பியுள்ளார் காயத்திரி ரகுராம்.
அண்ணாமலை நீங்கள் தமிழ்நாட்டில் மிகவும் பெரிய தலைவர். ஓப்டிக்ஸ் படி உங்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறலாம். ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் ஏன் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக்கூடாது? இடைத்தேர்தலில் கூட்டணியில் உள்ளீர்களா? 1/2
— Gayathri Raguramm – Say No To Drugs & DMK (@Gayatri_Raguram) January 19, 2023
அல்லது தனித்து போட்டியிடுகிறீர்களா? அல்லது சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடியுமா? இடைத்தேர்தலுக்காக குழுவை அமைத்துள்ளீர்களா? எனவே நீங்கள் போட்டியிடுகிறீர்களா இல்லையா என்பதை ஏன் அறிவிக்கக்கூடாது.. அதற்கு ஏன் ஒரு குழு? 2/2
— Gayathri Raguramm – Say No To Drugs & DMK (@Gayatri_Raguram) January 19, 2023