தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா.சுப்ரமணியத்திடம் காஞ்சிபுரம் உத்திரமேரூர் அடுத்த களியாம் பூண்டியை சேர்ந்த துளசிதாஸ் என்பவர் அமைச்சரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமைச்சரின் நேர்முக உதவியாளராகவுள்ள துளசிதாஸின் தந்தை சம்பத் கடந்த 6ம் தேதி இறந்ததை அடுத்து அவரது படத்திறப்பு விழாவானது உத்திரமேரூர் அருகில் உள்ள களியாமுண்டி கிராமத்தில் இன்று நடந்தது.

இந்த விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று துளசிதாஸின் தந்தை சம்பத்தின் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் வாயிலாக வெளிநாட்டு மற்றும் தரச்சான்று இல்லாத பொம்மைகளின் தரம் கட்டுபாடு பற்றியும் அதில் என்னென்ன ரசாயன பொருட்கள் கலந்துள்ளது, எந்தெந்த நாடுகளிலிருந்து வருகிறது என்பது உள்ளிட்ட பல செய்திகளை ஆராய்ந்து அதற்கேற்ற மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொம்மைகளை கையிலெடுத்து விளையாடுவது, அதிலுள்ள சாயத்தை எடுத்து நாக்கில் வைப்பது என்பது போன்ற விஷயங்கள் இருக்கும். ஆகவே குழந்தைகள் விளையாடக்கூடிய வெளிநாட்டு பொம்மைகள் விஷயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என அமைச்சர் கூறியுள்ளார்.