ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வயர்களை திருடியதாக ஒரு 12 வயது தலித் சிறுவன் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அந்த சிறுவனை நிர்வாணமாக்கி நடனம் ஆட வைத்துள்ளனர். அதோடு அந்த சிறுவனை செருப்பால் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனை செல்போனில் வீடியோவாக வாலிபர் ஒருவர் ரசித்து எடுத்தது தொடர்பான காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ வைரலான நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அமர்சிங், சந்திப் சிங், கௌரவ் சைனி, ஆஷிஷ் உபாத்யாய், யதாதி உபாத்யாய், சிட்டிஸ் குஜ்ஜர் ஆகிய 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.