பிரபல நடிகர் மயில்சாமியின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வுகள் ஒரு புறம் அரங்கேற பழைய நிகழ்வுகளை சமூக வலைதளங்கள் மூலமாக அசைபோடும் நிகழ்வு மற்றொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இவரது அரசியல் ரீதியான கருத்துக்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. எம்ஜிஆர் தீவிர பக்தர் என்று வலம் வந்தவர். இது பற்றி அவர் ஒவ்வொரு பேட்டியிலும் சொல்லாமல் விட்டதே இல்லை. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயாட்சியாக போட்டியிட்டு 1440 வாக்குகள் மட்டுமே பெற்று எட்டாவது இடம் பெற்று தோல்வியடை தோல்வியடைந்துள்ளார்.

அப்போது அவர் பல்வேறு சிறப்பு நேர்காணல்களை அளித்துள்ளார். தற்போது அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் அனைத்தும் வைரலாக தொடங்கியுள்ளது. அதாவது நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே ஒரு சிறந்த வரவேற்பு உண்டு. ஆனால் அவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள்? என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம் அதுக்கு உதாரணமாக என்னுடைய தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவரை தவிர வேறு யாரையும் என்னால் தலைவராக ஏற்க முடியாது. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவும், ஜெயலலிதா கட்டிக் காப்பாற்றிய அதிமுகவும் தற்போது இல்லை. அந்த கட்சி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல அதிமுக தொண்டர்கள் பலருக்கும் இருக்கக்கூடிய வேதனை.

இதனை தொடர்ந்து பேசிய போது, தேசிய கட்சி என் மாநிலத்தை ஆளக்கூடாது இந்தி பேசக் கூடியவர்கள் எங்களை ஆள வரக்கூடாது. குப்பனும், சுப்பனும் யார் வேண்டுமானாலும் இந்த மண்ணில் வரலாம். 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தி வேண்டாம் என நாம் போராடினோம். அதற்காக ரயில் மறியல், தீக்குளிப்பு என பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். எம்.ஜி.ஆர் பாட்டே பாடி இருக்கின்றார் என இந்தி எதிர்ப்பு குறித்து தனது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் விருகம்பாக்கம் தொகுதியில் நான் சுயேட்சையாக போட்டியிட காரணம் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த எதுவுமே சரி இல்லை. எனக்கு மட்டுமல்ல அது கட்சிக்காரர்களுக்கு அதிருப்தி. எத்தனை கட்சிக்காரர்கள் சுயேட்சையாக மாறி நிற்கிறார்கள் தெரியுமா? கணக்கெடுத்து பாருங்கள் உண்மை தெரியவரும். மேலும் பா.ஜ.கவிற்கு பினாமி அரசு போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தைரியமாக முடிவெடுக்க தைரியம் இல்லை என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.