வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களைகட்டி உள்ளது. ஈரோடு கிழக்குத் இடைத்தேர்தலுக்கான பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர்.

மேலும் வாக்காளர்களுக்கு வருகிற 25-ம் தேதி வரை பூத் சிலிப் வழங்க உள்ளதாகவும் தேர்தல் அலுவலர்கள் கூறியுள்ளனர். வாக்குச்சாவடியின் இடம் கண்டறியும் வரைபடம் வாக்குப்பதிவுக்கு தேவையான ஆவணங்கள், வாக்கு சாவடி நிலை அலுவலரின் தொடர்பு எண் போன்றவை பூத் சிலிப் பின் பகுதியில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதனால் வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களிக்கும் விதமாக மொத்தம் 238 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி திமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் சார்பாக  இ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

மேலும் அ.தி.மு.க சார்பில் இ.பி.எஸ் ஆதரவு வேட்பாளர் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள், இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது. மேலும் சில கட்சிகள் தேர்தலில் களம் காணவில்லை. குக்கர் சின்னம் ஒடுக்கப்படாத காரணத்தினால் தேர்தலில் போட்டியில்லை என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.