கல்கி 2898 AD  திரைப்படம் குறித்து youtube பிரபலம் மதன் கௌரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

ப்ராஜெக்ட் கே என அழைக்கப்பட்ட நடிகர் பிரபாஸ் அவர்களின் அடுத்த படமான கல்கி 2898 AD  படத்திற்கான டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. படத்தில் கமலஹாசன், ராணா, தீபிகா படுகோனே  என இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் இதில் இடம்பெற்றுள்ளனர். படத்தின்  டீசர் வெளியான நாள் முதல் இன்று வரை பல பிரபலங்கள் படம் குறித்து தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,

youtube பிரபலம் மதன் கௌரி இப்படம் குறித்து தனது கருத்தை twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் ரகசிய ஆயுதமே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். அவரது பின்னணி இசை அசத்தலாக இருப்பதாக தனது ட்விட்டர்  பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு வேறு சில பிரபலங்களும்  தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.